ADDED : பிப் 13, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வெங்காடு, எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன், 33, என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி துர்கா, 26.
கடந்த 5ம் தேதி இரவு, மனைவி துர்காவை பார்த்து மணிகண்டன் உருவ கேலி செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த துர்கா, சமையல் அறையில் இருந்த மண்ணெண்னையை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். உடலில், 60 சவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த துர்கா, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியானார்.