/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மீடியனுக்கு வர்ணம் தீட்டும் பணி
/
சாலை மீடியனுக்கு வர்ணம் தீட்டும் பணி
ADDED : பிப் 16, 2025 02:39 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒலிமுஹமதுபேட்டை பிரதான சாலையின் மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கான்கிரீட் கலவை வாயிலாக செய்யப்பட்ட மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையல், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மீடியன் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க, மீடியனுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணம் பூசப்பட்டு இருந்தது. பருவமழை காரணமாகவும் மற்றும் துாசு படிந்து இருந்ததால், வர்ணம் மங்கி சென்டர் மீடியன் பொலிவிழந்த நிலையில் இருந்தது.
இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீடியன் மீது மோதி விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், மீடியனுக்கு வர்ணம் தீட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், மீடியனுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணம் தீட்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் எல்லையில் பொலிவிழந்த நிலையில் உள்ள மீடியன்களுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.