ADDED : ஜன 25, 2025 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 21. தனியார் நிறுவன தொழிலாளி. இவர், சிங்காடிவாக்கத்தில் இயங்கும் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
சந்தோஷின் தாய், தந்தை இருவரும், ஏழு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தனர். இதையடுத்து அவர், திருமணமான சகோதரி கிருபா என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 20ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சந்தோஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, அவரது சகோதரி கிருபா அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.