/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு
/
கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு
ADDED : செப் 22, 2024 05:36 AM
வியாசர்பாடி, : வியாசர்பாடி அருகே அம்மன் கோவிலில் சிலைகள் திருடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் விஜயகுமாரி, 48. இவரும், இவரது கணவர் ரமேஷும் சேர்ந்து, வியாசர்பாடி, அசோக் பில்லர் அருகே, ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலை நிர்வகித்து வந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ரமேஷ் இறந்ததால், கோவிலை பராமரிப்பு செய்யாமல் மூன்று மாதங்களாக பூட்டியுள்ளனர். நேற்று, கோவிலை திறந்து சுத்தம் செய்தனர்.
அப்போது, கோவில் இரும்பு தகர பெட்டியை பூட்டாமல் வைத்திருந்த நிலையில், அய்யப்பன், முருகன், விநாயகர் சிலைகள் திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து விஜயகுமாரி புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.