/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவர் இல்லாத சாலை ஆற்றங்கரையோரம் 'திக்... திக்'
/
தடுப்புச்சுவர் இல்லாத சாலை ஆற்றங்கரையோரம் 'திக்... திக்'
தடுப்புச்சுவர் இல்லாத சாலை ஆற்றங்கரையோரம் 'திக்... திக்'
தடுப்புச்சுவர் இல்லாத சாலை ஆற்றங்கரையோரம் 'திக்... திக்'
ADDED : ஆக 17, 2024 12:59 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் பின்புறம் உள்ள தாயார் குளம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையோரம் வேகவதி ஆறு செல்கிறது.
பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து கலெக்ட்ரேட், திருப்பருத்திகுன்றம், வந்தவாசி சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, தரைமட்டத்தில் இருந்து, 5 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள வேகவதி ஆற்றங்கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், இப்பகுதியில் போதுமான மின்விளக்கு வசதியும் இல்லை.
இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத வேகவதி ஆற்றில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையை ஒட்டியுள்ள வேகவதி ஆற்றங்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.