/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் வேளாண் மையத்தில் 4 வகையான விதைகள் இருப்பு
/
திருமுக்கூடல் வேளாண் மையத்தில் 4 வகையான விதைகள் இருப்பு
திருமுக்கூடல் வேளாண் மையத்தில் 4 வகையான விதைகள் இருப்பு
திருமுக்கூடல் வேளாண் மையத்தில் 4 வகையான விதைகள் இருப்பு
ADDED : டிச 19, 2024 08:32 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் துணை வேளாண் விரிவாக்க மையத்திற்காக புதிய கட்டடடம் கட்டப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வேளாண் மையத்தில், சம்பா பின்பட்ட சாகுபடிக்கான நெல் விதை உட்பட 4 வகையான பயிர்களின் விதை ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, உத்திரமேரூர் வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, ஒன்றியத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், விதை பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருமுக்கூடல் வேளாண் மையத்தில், கோ - 51 ரக நெல் 5,100 கிலோ, கோ - 55 ரக நெல் 2,000 கிலோ, உளுந்து விதை (கம்பன் 8 சான்று நிலை) 1,070 கிலோ, கோ - 7 ரகம் பச்சைப்பயறு விதைகள் 300 கிலோ, கோ - 15 ரகம் கேழ்வரகு விதைகள் 180 கிலோ, எள்ளில் வி.ஆர்.ஐ., 4 ரகம் 50 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை உள்ளிட்டவையும் விநியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விதை பொருட்கள் தேவையான விவசாயிகள், அப்பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.