/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமானுஜர் பஜனை கூடத்தில் நாளை திருப்பாவை வீதியுலா
/
ராமானுஜர் பஜனை கூடத்தில் நாளை திருப்பாவை வீதியுலா
ADDED : ஜன 09, 2025 07:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீமத் பொய்கை ஆழ்வார் ராமானுஜ பஜனை கூடம் உள்ளது. நுாற்றாண்டை கடந்த பழமையான இந்த பஜனை கூடத்தில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை உற்சவந்தி எனப்படும் வீதியுலா நடந்து வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வீதியுலா, நாளை காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பஜனை கோஷ்டியினர் திருப்பாவை பாடல்களை பாடியபடி சிங்கபெருமாள் மற்றும் விளக்கொளி பெருமாள் மாட வீதிகளில் வீதியுலா வருகின்றனர்.
மேலும், சிறப்பு பூஜையாக கூடாரவல்லி சிறப்பு வழிபாடும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை பிரேம்குமார் பாகவதர் தலைமையில் பஜனை கோஷ்டியினர் செய்து வருகின்றனர்.