/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவள்ளூர் அணி 'டி20'யில் அபாரம்
/
திருவள்ளூர் அணி 'டி20'யில் அபாரம்
ADDED : டிச 20, 2025 05:32 AM
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான எஸ்.எஸ்.ராஜன் 'டி20' கிரிக்கெட் போட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மைதானங்களில் நடக்கிறது.
ராணிப்பேட்டையில் நேற்று நடந்த போட்டியில் திருவள்ளூர் அணி, ஈரோடு அணியை எதிர்த்து மோதியது.
டாஸ் வென்ற ஈரோடு அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்தது.
அந்த அணியின் வீரர் மோகன் பிரசாத், அபாரமாக விளையாடி 60 ரன்கள் குவித்தார். திருவள்ளூர் அணி சார்பில் சரவணன் 4 விக்கெட் சாய்த்து அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய திருவள்ளூர் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்களான விஜய்குமார் 50 பந்துகளில் 87 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார்.
மற்ற வீரர்கள் கைகொடுக்க அந்த அணி, 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து, அதிரடி வெற்றியை பதிவு செய்தது.

