/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாட்டு சாணத்தால் சகதியாகும் திருவங்கரணை தெருக்கள்
/
மாட்டு சாணத்தால் சகதியாகும் திருவங்கரணை தெருக்கள்
ADDED : அக் 25, 2025 11:43 PM

வாலாஜாபாத்: திருவங்கரணை கிராமத்தில் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை முறையாக கொட்டகையில் கட்டி பராமரிக்காததால் தெருக்களில் மாட்டு சாணம் அதிகரித்து சகதியாக உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், திருவங்கரணை கிராமத்தில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்து வருகிறது. பசு, மற்றும் எருமை மாடுகள் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.
மேய்ச்சலுக்கு செல்லும் தங்களது கால்நடைகளை, இரவு நேரங்களில் முறையாக கொட்டகையில் கட்டி பராமரிக்காமல் தெருக்களில் விட்டுவிடுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அக்கால்நடைகள் இரவு நேரங்களில் சாலை மற்றும் தெருக்களில் உலா வருவதும், அங்கேயே உறங்குவதுமாக உள்ளதால் திருவங்கரணை தெருக்கள் முழுதும் மாட்டு சாணம் காணப்படுகிறது.
மழை நேரங்களில் சாணம் மழைநீரோடு கலந்து தெருக்கள் முழுக்க சகதியாகிறது. இதனால், தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, திருவங்கரணை கிராமத்தில் தெருக்கள் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்க கால்நடைகளை கொட்டகையில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

