/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மங்களேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
/
மங்களேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED : பிப் 04, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் மங்களேஸ்வரர், ஏகம்பம் சோமவார அமைப்பு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மன்ற அமைப்பாளர் பிரேமாபாய் தலைமையில், சிவ பக்தர்கள் திருவாசகத்தில் உள்ள, 51 பதிகங்களில், 658 பாடல்களையும் முற்றோதல் செய்தனர். முன்னதாக மங்களேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.