ADDED : நவ 19, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மை திருவாசக முற்றோதல் குழு சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மன்ற அமைப்பாளர் சிவ வசந்தா தலைமையில், சிவபூஜை செய்த சிவபக்தர்கள், திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் முற்றோதல் செய்தனர்.
முன்னதாக மூலவர் அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது.