ADDED : ஏப் 13, 2025 09:42 PM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வி.ஆர்.பி.,சத்திரம் பகுதியைச்சேர்ந்த வீரா என்கிற வீரபத்திரன்,36. ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஸ்ரீபெரும்புதுார் போலீசார், அவரை கைது செய்தனர்.
இவர் மீது, இரு கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
அதேபோல், பிள்ளையார்பாளையம் பகுதியைச்சேர்ந்த செல்வம், 25. ஒரு கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக, சிவ காஞ்சி போலீசார் அவரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்திஸ்வரம் தாலுகா குமாரபுரம் கிராமத்தைச்சேர்ந் சுதர்சன், 50. ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக பொன்னேரிக்கரை போலீசார் அவரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, மருத்துவன்பாடி ஆகிய பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்புலிவனம் ஏரிக்கரை அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, 24; அரவிந்தன், 22, ஆகியோர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 1.6 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, 1,300 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி, 31, என்பவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.

