/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் ஒயர் திருடிய மூன்று பேர் கைது
/
மின் ஒயர் திருடிய மூன்று பேர் கைது
ADDED : பிப் 02, 2026 04:34 AM
உத்திரமேரூர்: களியப்பேட்டை சுற்றுவட்டாரத்தில், விவசாய பம்பு செட்டுகளில் மின் ஒயர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை, சாத்தணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சில தினங்களாக விவசாய கிணறுகளில் மோட்டாருக்கு பொருத்தப்படும் ஒயர்கள் மற்றும் மின்கம்பத்தில் இருந்து, பம்புசெட் செல்லும் மோட்டாருக்கான இணைப்பு ஒயர்களை மர்ம நபர்கள் துண்டித்து திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழும்பியது.
இதுகுறித்து, களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 35, என்ற விவசாயி தன் விவசாய பம்பு செட்டில் பியூஸ்கேரியர்கள் மற்றும் மோட்டார் மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றதாக சாலவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து, போலீசார், சாத்தணஞ்சேரியைச் சேர்ந்த சதீஸ்குமார், 20, எல்லப்பன், 19, மற்றும் அத்தியூரைச் சேர்ந்த ரோகித், 21, ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மின் ஒயர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து, உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் நீதிமன்றம் காவல் சிறையில் அடைத்தனர்.

