/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களிடம் மொபைல் போன் பறித்த மூன்று பேர் கைது
/
மாணவர்களிடம் மொபைல் போன் பறித்த மூன்று பேர் கைது
ADDED : மார் 20, 2024 10:17 PM
ஸ்ரீபெரும்புதுார்:சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசலு, 50, இவரது மகன் அஸ்வின் குமார், 20, பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லாரியில் பி,இ., படித்து வருகிறார்.
இவர், கடந்த வாரம் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு செல்ல, நண்பர் பிரவீன்குமார், 20 உடன், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே தண்டலம் நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் மூவர், மாணவர்கள் இருவரை மடக்கி, மிரட்டினர். பின், அவர்களிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திய ஸ்ரீபெரும்புதுார் போலீசார், திருவள்ளூர் பெரியகுளத்தைச் சேர்ந்த ஜான், 30, சென்னை அய்யப்பன்தாங்கல் ராஜா, 23, அபய்குமார், 30, ஆகிய மூன்று பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்று கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

