/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்றுநாள் கலைத்திருவிழா உத்திரமேரூரில் துவக்கம்
/
மூன்றுநாள் கலைத்திருவிழா உத்திரமேரூரில் துவக்கம்
ADDED : அக் 14, 2025 12:45 AM

உத்திரமேரூர், உத்திரமேரூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், மூன்று நாள் கலைத்திருவிழா நேற்று துவங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், 2025 -- 26ம் கல்வியாண்டில், உத்திரமேரூர் வட்டார அளவிலான கலைத்திருவிழா, உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விழா அரங்கில் நேற்று துவங்கியது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சுகுமாறன், வட்டார கல்வி அலுவலர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
கலைத்திருவிழாவை, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் கலை திருவிழாவின், முதல் நாளான நேற்று, 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -- மாணவியர், நடன போட்டி, கதை கூறுதல், பேச்சு போட்டி உள்ளிட்ட, 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர்.
இன்று, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கும், நாளை, 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கும் போட்டிகள் நடக்க உள்ளன.