/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
/
அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
ADDED : ஏப் 02, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:திருப்பருத்திகுன்றத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு, 36; பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கணேசன் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவரை, நேற்று முன்தினம், மதியம் 2:00 மணி அளவில், சதாவரம் பகுதியைச் சேர்ந்த காஜா, 36, தமீம் அன்சாரி, 19, ரியாஷ், 20, ஆகியோர் கணேசனை தாக்கிக் கொண்டிருந்தனர்.
இதை தட்டிக்கேட்ட ஆனந்பாபுவிடம் கத்தி காட்டி, 1,700 ரூபாயை நான்கு பேரும் பறித்து சென்றனர். ஆனந்பாபு அளித்த புகாரின்படி விஷ்ணு காஞ்சி போலீசார் காஜா, ரியாஷ், தமீம் அன்சாரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதில், காஜா மீது, இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

