/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வியாபாரிக்கு மிரட்டல் மூன்று பேர் சிக்கினர்
/
வியாபாரிக்கு மிரட்டல் மூன்று பேர் சிக்கினர்
ADDED : டிச 10, 2024 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம், மண்டித்தெருவில் வசிக்கும் மணி, 34, என்பவர், பூக்கடை சத்திரம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தருவதற்கு மணி மறுத்துள்ளார்.
இதையடுத்து, பணம் கேட்டு மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, செட்டிக்குளத்தைச் சேர்ந்த உதயா, 19, சிவா, 24, சந்தோஷ், 23, ஆகிய மூன்று பேரை கைது செய்த சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.