/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே டூ - வீலரில் சென்ற மூவர் கன்டெய்னர் லாரியில் சிக்கி பலி
/
ஒரே டூ - வீலரில் சென்ற மூவர் கன்டெய்னர் லாரியில் சிக்கி பலி
ஒரே டூ - வீலரில் சென்ற மூவர் கன்டெய்னர் லாரியில் சிக்கி பலி
ஒரே டூ - வீலரில் சென்ற மூவர் கன்டெய்னர் லாரியில் சிக்கி பலி
ADDED : நவ 27, 2024 09:14 PM
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த, சென்னசமுத்திரம், மலைமேட்டைச் சேர்ந்தவர் சேட்டு; அவரது மனைவி கஜலட்சுமி,40. இவர்களது மகன்கள் மதன், 20.; மனோஜ், 18.
திருப்புட்குழி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு, கஜலட்சுமி, தன் இரு மகன்களுடன், நேற்று மாலை, 'ஸ்பிளன்டர்' இரு சக்கர வாகனத்தில், மூன்று பேரும், ஹெல்மெட் அணியாமல் ஒன்றாக சென்று கொண்டிருந்தனர்.
மதன், இருசக்கர வாகனத்தை, நேற்று, மாலை 4:00 மணி அளவில், ஓச்சேரி நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது, தாமல் கிராமம், இந்திரா நகர் அருகே, சென்னை- - பெங்களூரு நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை முந்த முயன்றார்.
அப்போது, கன்டெய்னர் லாரியின் பின்புற டயரில் மூவரும் சிக்கினர்.
பாலுச்செட்டிசத்திரம் போலீசார், கன்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், கஜலட்சுமி, மனோஜ் ஆகிய இருவரும்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த மதனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து, பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.