/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரோந்து போலீசாரை கல்வீசி தாக்கிய ரவுடிகள் மூவர் கைது: ஒருவர் 'எஸ்கேப்'

ADDED : ஜன 03, 2026 05:24 AM
ஓட்டேரி: போலீசாரை தாக்கிய ரவுடிகளில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டேரி, ஏகாங்கிபுரம், ராஜிவ்காந்தி நகர் பகுதி யில் ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மங்களபுரம் குடியிருப்பு பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடி அப்பு என்பவரை மடக்கி பிடித்தனர்.
அவர், கையில் இருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்று, திடீரென தன் கை மற்றும் கழுத்து பகுதியிலும் வெட்டி கொண்டார்.
போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்போது, அப்புவின் கூட்டாளிகள் போலீசார் மீது கல்வீசி, அங்கிருந்து தப்பி சென்றனர்.
காயமடைந்த ரவுடி அப்பு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து அங்கிருந்து தலைமறைவானார்.
இது குறித்து விசாரித்த போலீசார், பெரம்பூர் மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த சூர்யா, 29 விஜயகுமார், 28, சுகுமாரன், 45 ஆகிய மூன்று ரவுடிகளை நேற்று கைது செய்தனர். அப்புவை தேடி வருகின்றனர்.