/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 19ல் திருக்கச்சிநம்பி உற்சவம்
/
வரும் 19ல் திருக்கச்சிநம்பி உற்சவம்
ADDED : பிப் 08, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:திருக்கச்சிநம்பிகளுக்கு, நடப்பு ஆண்டு மாசி மாத உற்சவம், நாளை மறுதினம் துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது.
உற்சவத்தையொட்டி, தினமும் காலையில், திருக்கச்சிநம்பிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையும், மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
பிப்., 18ல், மாலை 6:00 மணிக்கு, ஆடிசன்பேட்டை செட்டித்தெருவில், திருக்கச்சிநம்பிகள் வீதியுலா மற்றும் மண்டகப்படி உற்சவமும், பிப்., 19ல் மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், மாலை, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.

