/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுகாவேரிபாக்கத்தில் கழிப்பறை தின விழிப்புணர்வு
/
சிறுகாவேரிபாக்கத்தில் கழிப்பறை தின விழிப்புணர்வு
சிறுகாவேரிபாக்கத்தில் கழிப்பறை தின விழிப்புணர்வு
சிறுகாவேரிபாக்கத்தில் கழிப்பறை தின விழிப்புணர்வு
ADDED : நவ 20, 2025 04:21 AM
சிறுகாவேரிபாக்கம்: காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காஞ்சனா தலைமை வகித்தார். கழிப்பறையின் அவசியம் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து மாணவ- - மாணவியர் கழிப்பறையின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்தனர்.
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மண்டல அலுவலர் சுந்தர் அவர்கள் தலைமையில், ஊராட்சி செயலர்கள், மக்கள் நல பணியாளர்கள், சுகாதார ஊக்குனர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர் உள்ளிட்டோருக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

