/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு தலைமை மருத்துவமனையில் கழிப்பறை பராமரிப்பு படுமோசம்
/
அரசு தலைமை மருத்துவமனையில் கழிப்பறை பராமரிப்பு படுமோசம்
அரசு தலைமை மருத்துவமனையில் கழிப்பறை பராமரிப்பு படுமோசம்
அரசு தலைமை மருத்துவமனையில் கழிப்பறை பராமரிப்பு படுமோசம்
ADDED : ஏப் 15, 2025 06:30 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே ரோட்டில் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 3,000 பேர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.
உள் நோயாளிகளுக்காக 700 க்கும் அதிக படுக்கை வசதிகள் இங்குள்ளன. நோயாளிகள் மட்டுமல்லாமல், அவர்களுடன் ஆயிரக்ணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு, இந்த மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை கழிப்பறைகள் சரிவர பராமரிப்பதில்லை என புகார் எழுகிறது.
புறநோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளும், உள்நோயாளிகளின் கழிப்பறைகளும் மோசமான நிலையில், இருப்பதாக நோயாளிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சுத்தமில்லாத கழிப்பறை வாயிலாகவே, தொற்று ஏற்பட்டு, புதிய நோய்களுக்கு ஆளாகிவிடுவோம் என, நோயாளிகளும், உடன் வருபவர்களும் தெரிவிக்கின்றனர். கழிப்பறை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, நோயாளிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.