/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சி பள்ளியில் கழிப்பறை பணி இழுத்தடிப்பு
/
காஞ்சி மாநகராட்சி பள்ளியில் கழிப்பறை பணி இழுத்தடிப்பு
காஞ்சி மாநகராட்சி பள்ளியில் கழிப்பறை பணி இழுத்தடிப்பு
காஞ்சி மாநகராட்சி பள்ளியில் கழிப்பறை பணி இழுத்தடிப்பு
ADDED : அக் 25, 2025 02:09 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கிருஷ்ணன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில், கழிப்பறை கட்டும் பணியை முடிக்காமல், ஏழு மாதங்களாக இழுத்தடிக்கப்படுவதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் தெருவில், சேர்மன் சாமிநாதன் மாநகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில், 125 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, மாணவ- - மாணவியருக்கு என, தலா ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.
இதனால், மாணவ - மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி வளாகத்திலேயே கூடுதலாக கழிப்பறை கட்டும் பணியை, மார்ச் மாதம் மாநகராட் சி நிர்வாகம் துவக்கியது.
பணி துவங்கி ஏழு மாதங்கள் கடந்தும் இன்னும் முடிக்காமல் அதிகாரி கள் இழுத்தடிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கும் இரு கழிப்பறைகள் மட்டுமே உள்ளது, மிகுந்த சிரமத்தை அளிக் கிறது. கழிப்பறையின் கட்டு மான பணிகள் பெரும்பாலும் முடிந்த நிலையில், தரை அமைப்பது, சுண்ணாம்பு அடிப்பது போன்ற பணி பாக்கி உள்ளது.
எனவே, பணிகளை முடித்து கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

