UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 02:44 PM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத்: ‘சந்தன குட ஊர்வலம் நாளை நடைபெற உள்ளது’ என, மஹான் ஹஸரத்ஷா மஸ்தான் அவுலியா தர்கா ஷெரீப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாலாஜாபாத் ராஜ வீதியில், மஹான் ஹஸரத்ஷா மஸ்தான் அவுலியா தர்கா ஷெரீப் இயங்கி வருகிறது. இங்கு, சந்தன குட உரூஸ் உத்சவம், கடந்த 12ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடந்து வருகிறது. நாளை இரவு சந்தனக்குட உரூஸ் உத்சவம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் நள்ளிரவு, சந்தன குடம் ஊர்வலமாக புறப்பட்டு, அதிகாலை தர்காவை வந்தடையும். நாளை மறுநாள் இரவு 7:00 மணியளவில் உரூஸ் உத்சவத்துடன் விழா நிறைவுபெற உள்ளது.
