/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்
/
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்
ADDED : டிச 05, 2024 11:37 PM

ஸ்ரீபெரும்புதுார், தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் முக்கிய சந்திப்புகளில் கட்டங்களின் மீது, பல டன் எடை கொண்ட இரும்பு சட்டங்களில் வைக்கப்படும் ராட்சத விளம்பர பேனர்கள், அவ்வப்போது விழுந்து விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து, நீதிமன்றங்கள் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளன.
ஆனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோடை, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில், ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை, ஒரகடம் மற்றும் குன்றத்துார் சாலைகள் இணையும் ஸ்ரீபெம்புதுார் சந்திப்பில், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர், சமீபத்தில் 'பெஞ்சல்' புயலின் போது பலத்த காற்றுடன் பெய்த மழையால் கிழிந்துள்ளது.
தற்போது அது, இரும்பு சட்டத்தில் ஊசலாடி வருகிறது. பலத்த காற்று வீசும் போது, கிழிந்து சாலையில் விழுந்தால், வானக ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
இதனால், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, விபத்து ஏற்படும் முன், கிழிந்து தொங்கும் விளம்பர பேனரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.