/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹம்ஸ வாகனத்தில் விஜயராகவ பெருமாள் உலா
/
ஹம்ஸ வாகனத்தில் விஜயராகவ பெருமாள் உலா
ADDED : மார் 05, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புட்குழி:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழியில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத விஜயராக பெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இதில், இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் எழுந்தருளி உலா வந்தார்.
மூன்றாம் நாள் உற்சவமான இன்று காலை, கருடசேவை உற்சவம் நடக்கிறது. இதில், பாலுசெட்டிசத்திரத்தில் மண்டகபடி நடக்கிறது. இரவு அனுமந்த வாகன உற்சவம் நடக்கிறது.
ஏழாம் நாள் உற்சவமான வரும் 10ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

