/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இயற்கை விவசாயம் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
/
இயற்கை விவசாயம் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
இயற்கை விவசாயம் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
இயற்கை விவசாயம் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 26, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விவசாயம் சார்ந்த தொழிற்கல்வி பாடப்பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, படிக்கும் மாணவர்களுக்கு, 80 மணி நேர வேளாண் பயிற்சி நடந்து வருகிறது.
நேற்று, புஷ்பகிரி விவசாய பண்ணையில், மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், விவசாய பண்ணை உரிமையாளர் ஜனா, இயற்கை சாகுபடிக்கு நிலம் பண்படுத்தல், விதை நேர்த்தி செய்தல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் ஆகிய பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.