/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு துறை தேர்வுக்கு வரும் 18 முதல் பயிற்சி துவக்கம்
/
கூட்டுறவு துறை தேர்வுக்கு வரும் 18 முதல் பயிற்சி துவக்கம்
கூட்டுறவு துறை தேர்வுக்கு வரும் 18 முதல் பயிற்சி துவக்கம்
கூட்டுறவு துறை தேர்வுக்கு வரும் 18 முதல் பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 13, 2025 01:49 AM
காஞ்சிபுரம்: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 18ம் தேதி முதல் துவங்க உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் 49 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 18ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்த விபரங்களுக்கு 044- 2723 7124 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.