/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்கலை மாணவ - மாணவியருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் பயிற்சி
/
பல்கலை மாணவ - மாணவியருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் பயிற்சி
பல்கலை மாணவ - மாணவியருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் பயிற்சி
பல்கலை மாணவ - மாணவியருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் பயிற்சி
ADDED : நவ 06, 2025 10:52 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை மாணவ - மாணவியருக்கு, சென்னை ஐ.ஐ.டி., யில் பதிகணினியியல் செயல்சார் செய்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி., காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையின், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் சார்பில், மின்சார பொறியியல் துறையில், பதிகணினியியல் செயல்சார் செய்முறை பயிற்சி முகாம் சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியை தொழில்நுட்ப அதிகாரி அமுதா ஒருங்கிணைப்பில், ஐ.ஐ.டி., ஸ்டெம் மையம் குழுவினர், மைக்ரோ கன்ட்ரோலர் அப்ளிகேஷன்ஸ், ப்ரோகிராம்மிங், சென்சார் இன்டெர்பேஸிங், பதிகணினியியல் துறையில் தொழில் மற்றும் ஆராய்ச்சி குறித்து மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.