திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள் குறித்து பயிற்சி
திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள் குறித்து பயிற்சி
UPDATED : மே 16, 2026 06:09 PM
ADDED : மே 16, 2026 05:52 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குநர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள் குறித்த பயிற்சி முகாம் (மே 15) நடந்தது.
'திடக்கழிவு மேலாண்மை திட்டம் - 2026' புதிய விதிகளின்படி, கிராம ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பையை தரம் பிரித்து பெறுவது அதை பாதுகாப்பாக அகற்றுவது மற்றும் ‛துாய்மை தமிழகம்' செயலியில் பதிவேற்றம் செய்யும் முறைகளுக்கான குறித்த பயிற்சி, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், உதவி திட்ட அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பவானி ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் புதிய விதிகள் குறித்து சுகாதார ஊக்குநர்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு விளக்கி பயிற்சி அளித்தனர்.
ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி வாழ்த்துரை வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தார்.
