ADDED : பிப் 21, 2024 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக பிரியா ராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
அவருக்கு, திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக, திருப்பத்துார் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் என்பவரை, சுகாதாரத்துறை நியமித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஓரிரு நாட்களில் பொறுப்பு ஏற்க உள்ளார் என, சுகாதார துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.