/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
/
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜன 01, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில், அரசு போக்கு வரத்துக் கழக மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர், நேற்று வாயில் துணி கட்டிக்கொண்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஓய்வூதிய நிலுவைத் தொகை, அகவிலைப்படி உயர்வு, அனைத்து ஓய்வூதியதாரர்களின் மருத்துவ காப்பீடு செலவை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.