/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வண்டலுார் பூங்காவில் வங்க புலிக்கு சிகிச்சை
/
வண்டலுார் பூங்காவில் வங்க புலிக்கு சிகிச்சை
ADDED : பிப் 16, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடல் நிலை பாதிக்கப்பட்ட விஜயன் என்ற வங்கப் புலிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், 17 வயதான, 'விஜயன்' என்ற வங்கப்புலி பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக, இந்த புலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், வண்டலுார் உயிரியல் பூங்கா மருத்துவர்கள், இப்புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, பூங்கா வட்டாரத்தில் பேசப்படுகிறது.