காஞ்சியில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு மரக்கிளைகள் அகற்றம்
காஞ்சியில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு மரக்கிளைகள் அகற்றம்
ADDED : பிப் 02, 2026 04:45 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறாக தண்டவாரம் அருகில் இருந்த மரக்கிளைகளை பொறியாளர் பிரிவு ஊழியர்கள் அகற்றினர்.
காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம் என அழைக்கப்படும் கிழக்கு ரயில் நிலையம் ஒட்டியுள்ள, ரயில்வே சாலையோரம் நிழல் தரும் வகையில் பல்வேறு வகையிலான 10க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
இம்மரங்களின் கிளைகள் ரயில்வே தண்டவாளம் ஓரம் நீண்டு வளர்ந்து இருந்ததால், ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதோடு, ரயில் பெட்டி நுழைவாயிலில் நின்றபடி பயணிப்போரை கிளைகள் உரசும்படி இருந்தது.
இதனால், ரயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ரயில்வே பொறியாளர் பிரிவு ஊழியர்கள், ரயில்வே தண்டவாளம் ஓரம் இடையூறாக இருந்த மரக்கிளைகளை நேற்று முன்தினம் அகற்றினர்.
