/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு துவக்க பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
அரசு துவக்க பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 27, 2025 12:41 AM

அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், மரக்கன்று நடும் விழா மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விதைகள் தன்னார்வ அமைப்பு, வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தின் கவர்களால் ஏற்படும் தீமை குறித்தும், 'மஞ்சப்பை' பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மரக்கன்று நடுவது மட்டும் அல்லாமல், அதை எவ்வாறு பாதுகாப்பாக வளர்ப்பது என விளக்கம் அளிக்கப்பட்டது.
'மரக்கன்று நடுவோம், காலநிலை மாற்றத்தை மாற்றியமைப்போம், மஞ்சப்பையை தேர்வு செய்வோம், பசுமையை பரப்புவோம், எப்போது கடைக்கு சென்றாலும், நெகிழி பையை தவிர்த்து மஞ்சப்பையையே பயன்படுத்துவோம்' என, மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.