ADDED : ஜூலை 23, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவிலிமேடு:காஞ்சிபுரம் செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, இன்னர் வீல் கிளப் ஆப் காஞ்சிபுரம் சார்பில், செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
இதில், பள்ளி மாணவ - மாணவியருடன் தன்னார்வலர்கள் இணைந்து, 5 அடி உயரம் உள்ள நெட்டிலிங்கம், புன்னை, மகிழம், கடம்பு, மகாகனி, பாதாம் உள்ளிட்ட 15 மரக்கன்றுகளை நட்டனர்.