UPDATED : ஜூலை 30, 2025 11:35 PM
ADDED : ஜூலை 30, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தையொட்டி, அலையன்ஸ் சங்கம் மற்றும் பாலாறு லயன்ஸ் சங்கம் இணைந்து, வாலாஜாபாத் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
![]() |
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, வாலாஜாபாத் மருத்துவ அலுவலர் ஜெயராணி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.
முதல் கட்டமாக, 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

