நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறகுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், பள்ளி, கல்லுாரி வளாகங்களில் மரக்கன்று நடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், புங்கன், மரமல்லி, சரக்கொன்றை, நாவல் உள்ளிட்ட 50 மரக்கன்றுகளை தன்னார்வ அமைப்பினர், பள்ளி மேலாண்மை குழுவினர் நடவு செய்தனர்.