/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
/
அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : பிப் 13, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் சென்னை சமூகப்பணி கல்லுாரி சார்பில், வாலாஜாபாத் ஒன்றியம், தென்னெரி அடுத்த, அகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தன.
இதில், பள்ளி மாணவ- -மாணவியருடன் விதைகள்தன்னார்வ அமைப்பினர்,சமூக பணி கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் நிழல் மற்றும் பழம் தரும் மரங்களான புங்கன், பூவரசு, அத்தி, சீதா உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நட்டனர்.
தொடர்ந்து மரங்களின் முக்கியத்துவம் மரங்கள் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விதைகள் அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

