/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தம்மனுாரில் மர்ம நபர்களால் தீயில் கருகி மரங்கள் நாசம்
/
தம்மனுாரில் மர்ம நபர்களால் தீயில் கருகி மரங்கள் நாசம்
தம்மனுாரில் மர்ம நபர்களால் தீயில் கருகி மரங்கள் நாசம்
தம்மனுாரில் மர்ம நபர்களால் தீயில் கருகி மரங்கள் நாசம்
ADDED : ஏப் 03, 2025 01:56 AM

வாலாஜாபாத், :வாலாஜாபாத் அடுத்த, தம்மனுார் அருகே, பில்லந்தாங்கல் என்ற நீர்த்தேக்க பகுதி உள்ளது. கடந்த நாட்களில் வெப்பம் அதிகரிப்பால் பில்லந்தாங்கல் நீர்த்தேக்கம் தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மது பிரியர்கள் அதிகமானோர், மது அருந்துவதற்கு அப்பகுதியை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம், மர்ம நபர்கள் கொளுத்திய தீயால், பில்லந்தாங்கல் பகுதி வயல் முழுக்க தீப்பிடித்து எரிந்தது. காற்றின் திசையில் தீ பரவியதை அடுத்து, அப்பகுதியில் உள்ள தனியாரது பண்ணை தோட்டத்திலும் தீப்பிடித்தது.
பண்ணையில் இருந்த மா, கொய்யா மற்றும் தைல மரங்கள் தீயில் கருகி, அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்ததால் அப்பகுதியினர் பதற்றம் அடைந்தனர்.
தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனால், பண்ணை தோட்டத்தில் இருந்த 50 ஏக்கர் பரப்பிலான பல வகை மரங்கள் மற்றும் அப்பகுதி தனியார் விவசாய நிலங்களின் சாகுபடி பயிர்கள் தப்பியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

