/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் தாலுகாவில் 'பெஞ்சல்' புயலால் மரங்கள் சாய்ந்தன
/
உத்திரமேரூர் தாலுகாவில் 'பெஞ்சல்' புயலால் மரங்கள் சாய்ந்தன
உத்திரமேரூர் தாலுகாவில் 'பெஞ்சல்' புயலால் மரங்கள் சாய்ந்தன
உத்திரமேரூர் தாலுகாவில் 'பெஞ்சல்' புயலால் மரங்கள் சாய்ந்தன
ADDED : டிச 02, 2024 02:08 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் - -வந்தவாசி நெடுஞ்சாலை, மானாம்பதி பகுதியில், 'பெஞ்சல்' புயலால், ஏற்பட்ட மழையின்போது நேற்று முன்தினம், புளிய மரம் முறிந்து நெடுஞ்சாலையிலே விழுந்தது.
இதனால், அப்பகுதியில், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் முறிந்த விழுந்த மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
அதேபோல, உத்திரமேரூர் - -காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், மணல்மேடு பகுதியில் முறிந்து விழுந்த காட்டுவாகை மரத்தை அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சி, எம்.ஜி.ஆர் நகரில் மின் கம்பம் சாய்ந்தது. உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.