/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி மையம்
/
10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி மையம்
10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி மையம்
10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி மையம்
ADDED : மே 23, 2025 02:05 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பி.டி.வி.எஸ்., மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியருக்காக இலவச சிறப்பு பயிற்சி மையம் நேற்று துவக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்சி மைய ஆசிரியை தீபா வரவேற்றார். பி.டி.வி.எஸ்., மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஜோசீனா, மாணவர்களுக்கு புத்தகத்தை வழங்கி பேசினார்.
முதுநிலைத் திட்ட மேலாளர்கள் சுந்தர், துாயவன் ஆகியோர், சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக ஏற்கனவே பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களையும், மேலும் பள்ளி செயல்படும் விதம் குறித்தும் விளக்க உரையாற்றினர்.
இம்மையம்ம், காலை 9:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை நடைபெறும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வாயிலாக வகுப்பு நடத்தப்படுகிறது.
இதில், சேர விரும்புவோர் 98428 74512, 94451 76083, 93818 82167 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.