ADDED : அக் 23, 2025 09:48 PM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, டீ கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, தெரேசாபுரத்தில் உள்ள டீ கடையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், ஸ்வாகத், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 1300 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் குமார், 24, என்பவரை கைது செய்தனர்.
அதே போல, சுங்குவார்சத்திரம் அருகே, பொடவூர் கிராமத்தில் உள்ள பெட்டி கடையில் நடத்திய சோதனையில், 2 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் பாக்கியராஜ், 46, என்பவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.