/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
9 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய இருவர் கைது
/
9 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய இருவர் கைது
ADDED : அக் 05, 2024 10:58 PM

கும்மிடிப்பூண்டி,
தமிழ்நாடு - ஆந்திர எல்லை, திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது.
நெல்லுாரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை நேற்று அதிகாலை நிறுத்தி, போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இரு பயணியரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில், ஒன்பது கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.
விசாரணையில் இருவரும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அனரல் இஸ்லாம், 28, சபுஜ் ஷேக், 32, என்பது தெரிந்தது.
சென்னை வழியாக, கேரள மாநிலத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.