/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
16 டன் இரும்பு கம்பி திருடிய இருவர் கைது
/
16 டன் இரும்பு கம்பி திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 01, 2025 12:12 AM

உத்திரமேரூர், திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ், 48 ; ஓட்டுநர். இவர், உத்திரமேரூர் அடுத்த, அமராவதிபட்டினத்தில் இயங்கி வரும் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், தேவராஜ், நேற்று முன்தினம் புக்கத்துறை கூட்டுச்சாலையில் உள்ள, பழைய இரும்பு வாங்கும் கடை அருகே லாரியுடன் நின்று கொண்டு இருந்துள்ளார்.
இதை கண்ட தொழிற்சாலை ஊழியர் ஒருவர், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர், லாரி ஓட்டுநர் தேவராஜ், 2.5 டன் இரும்புக் கம்பியை தொழிற்சாலையில் இருந்து திருடி, பழைய இரும்பு வாங்கும் கடையில் விற்பனை செய்துள்ளார். இதை கண்ட, தொழிற்சாலை நிர்வாகத்தினர் லாரி ஓட்டுநர் தேவராஜ் மீது, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், தேவராஜ் தொடர்ந்து இரும்புக் கம்பியை திருடி இதேபோல விற்று வந்தது தெரிந்தது. பின், பழைய இரும்புக்கடையில் இருந்து 16 டன் எடை கொண்ட இரும்புக் கம்பியை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து, லாரி ஓட்டுநர் தேவராஜ் மற்றும் திருடிய இரும்பு கம்பியை வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பாபு, 43, ஆகிய இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.