தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ லாரியில் பேட்டரி திருடிய இரண்டு பேர் சிக்கினர்

லாரியில் பேட்டரி திருடிய இரண்டு பேர் சிக்கினர்

லாரியில் பேட்டரி திருடிய இரண்டு பேர் சிக்கினர்


ADDED : செப் 11, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார், செப். 12–

சுங்குவார்சத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரியில் பேட்டரி திருடிய இரண்டு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம், 50. இவருக்கு சொந்தமான லாரி ஒன்று நேற்று முன்தினம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வந்தது.

அன்றிரவு, சுங்குவார்சத்திரம் – வாலாஜாபாத் சாலையோரம், தொழிற்சாலை எதிரே லாரி நிறுத்திவிட்டு, ஓட்டுநர் லாரியின் துாங்கினார்.

அப்போது, மர்ம நபர்கள் இருவர், லாரியில் இருந்து பேட்டரியை திருடி சென்றனர். இது குறித்து, லாரி உரிமையாளர் கோதண்டம் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி, திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அசாருதின், 27, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகமது அப்பாஸ், 31, ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us