ADDED : செப் 20, 2026 08:04 PM
ஸ்ரீபெரும்புதுார், செப். 21–
ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியார் உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல்சர் பைக்கை திருடி சென்ற 24 வயது வாலிபர்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் – குன்றத்துார் சாலையில் பிள்ளைப்பாக்கம் சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக இருந்து பல்சர் பைக்கில் வந்த மூவர், போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கினர். அப்போது, மூன்று பேரில் இருவர் சிக்கினர், ஒருவர் தப்பினார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போந்துாரில் உள்ள தனியார் உணவகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கை திருடி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்கிருஷ்ணா, 24, சைதாபேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 24, ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
