/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டுமான பொருட்கள் திருடிய இருவர் கைது
/
கட்டுமான பொருட்கள் திருடிய இருவர் கைது
ADDED : நவ 22, 2024 08:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில் உள்ள விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 40. கட்டட ஒப்பந்ததாரர். காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் கட்டட பணி செய்து வருகிறார்.
கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு வேலை முடித்துவிட்டு, கட்டுமான கருவிகள், பொருட்களை, அங்கேயே மூன்றாவது மாடியில் வைத்து சென்றுள்ளார்.
மறுநாள் காலை 9:00 மணிக்கு, கட்டடத்திற்கு சென்று பார்த்தபோது, இரும்பு தட்டுகள், சுவர் துளைக்கும் இரும்பு பொருட்கள் என, 30,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், நாயக்கன்பேட்டையைச் சேர்ந்த விஜய், 26, ரமேஷ், 22, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கட்டுமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

