ADDED : மார் 23, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தபடியே உள்ளன.
இதில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களில், திருடுபோன 4 இருசக்கர வாகனங்கள் பற்றி, விஷ்ணுகாஞ்சி உள்ளிட்ட போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இருசக்கர வாகனங்களை தொடர்ந்து திருடி வந்ததாக, காஞ்சிபுரம் காலாண்டர் தெருவைச் சேர்ந்த வசந்த், 25, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவைச் சேர்ந்த சண்முகம், 25, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும், 4 இருசக்கர வாகனங்களை விஷ்ணுகாஞ்சி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
