/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழங்குடியின தொழிலாளியை தாக்கிய இருவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

ADDED : செப் 17, 2025 01:39 AM

உத்திரமேரூர்:ஒழுகரையில் பழங்குடியின தொழிலாளியை தாக்கிய இருவரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 39; கூலி தொழிலாளி. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவர், ஐந்து ஆண்டுகளாக மடம் கிராமத்தில் குடும்பத்தோடு தங்கியவாறு, ஒழுகரை கிராமத்தில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குமார் வழக்கம்போல செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார்.
மாலை 6:00 மணிக்கு செங்கல் சூளைக்கு அருகிலுள்ள நிலத்தில், வைக்கோல் கட்டுகள் அடுக்குவது தொடர்பாக முருகன் என்பவருக்கும், குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின் வாக்குவாதம் முற்றி முருகனும் அவருடைய சகோதரர் அருணாச்சலம், 50; என்பவரும் சேர்ந்து, பனை மட்டையில் குமாரை முகம் மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கினர்.
இதை கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்த குமாரை மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரையடுத்து உத்திரமேரூர் போலீசார் முருகன் மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.